என் சோகம்
என் சோகம் 😂
என் சோகம் என்னோடு தான்.
என் சோகம் என் நெஞ்சோடு தான்.
சோகம் மற்றவர்களுடன் பரிமாற அது என்ன இன்சுவை உணவா?
அல்லது பல்சுவை நிகழ்ச்சியா?
எப்போதும் சந்தோஷத்தை வாரி இறைப்பேன்.
என்றும் மகிழ்ச்சியை அள்ளி வழங்குவேன்.
சோகத்தை என் இதயத்தில் பூட்டி வைப்பேன்.
அதன் சாவி என்னிடமே.
எப்போது திறப்பேன்
எனக்கே தெரியாது.
- பாலு.