வளமாக வாழ்வுத் தரும்

வளமாக வாழ்வுத் தரும்
வளம் நிறைந்த பூமியிலே
வாய்க்காலையும் நீர் வழித்தடத்தையும்
வரைமுறையோடு வகுத்துக் காக்க
வன்சட்டம் செய்து வைத்து
வலிமையோடு காத்தல் வேண்டும்

இறைந்த நீரை உறிந்துக்கொண்டு
இலைகள் வழியே நீரையேற்றும்
இயற்கை இயந்திர மரத்தை நட்டு
இயன்றவரை வளர்த்து வந்தால்
இந்த பூமி இளமையாகும்
இல்லாத மழையும் வந்து சேரும்

போதை பானத்திற்கான முக்கியத்தை
பொது வெளியில் மரத்தை நட அரசு தந்தால்
பொங்கித் தண்ணீர் பெருகிவரும்
பொசுக்கும் அனலும் மிரண்டு ஓடும்
பொன்னாய் பூமியும் விளைந்துக்கொட்டும்
பொன்னியாய் மாநிலம் பொங்கி வழியும்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (25-Jul-19, 8:12 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 82

மேலே