தெரு ஓரம் காத்திருந்தவன்
கண்மணியே
காலம் நீண்டு சென்ற போதும்
உன்னை காண தேடி வந்தேனே,
தெரு ஓரமாய் நீ வீசிய ஒற்றை பார்வை
இன்று
என்னை கவ்வி கொண்டு வந்ததே,
உந்தன் விழி அசைவுக்கு மயங்கியும் ,
உன் அன்பை எதிர்பார்த்தும் வந்துவிட்டேன்
ஆனால்
சில பல மணித்துளிகள் கடந்த போதும்
உன்னை காண காத்திருக்கிறேன்
தெருஓரமாய் ............................................