அழகிய ஆம்பலே உனை
தேன் கூண்டாய் வளர்த்து வைத்தேன்
காதலை தேன் போலே சேகரித்தேன்
காதல் இராணித் தேனீ நீ தாண்டி
காதல் தேன் சொரியும் வேலைத்தேனீ நான் தானே
தோணும் காதல் எண்ணத் தேனை
துளித்துளியாய் சேகரித்து தோத்திரத்தேன் உன்னை
அகம் மகிழ்ந்து ஆராதிக்கிறேன் காதலால் தினமும்
அழகியே அன்போடு உனைத் தழுவ அனுமதிப்பாயோ
உச்சம் தொடும் காதல் நிலையில் உள்ளேனடி
உறுதியோடு உன் ஒப்புதல் வேண்டுமடி
அல்லும் பகலும் அறுபது நாழிகையும்
அழகிய ஆம்பலே உனை நினைத்து வாடி நிற்கிறேன்.
----- நன்னாடன்.