சின்ன புள்ள
சின்ன புள்ள
செல்ல புள்ள
காதல் வந்தா சொல்லு புள்ள
நானும் இங்கே காத்திருக்கேன்
என்னை கொஞ்சம் பாரு புள்ள
காற்று சிறகடிக்க
சாரல் சிதரவிட
மழையும் என்னை நனைக்க
பாவி மனம் உன்னை தேடுதடி
உன்னோட வாழ இங்கு
எனக்கோ வழியுமில்ல
உன்னோட வாழ்க்கையில
எனக்கோ அனுமதி இல்ல
சிற்பமாய் வரைந்தேன் உன்ன
சிறகொடிந்து பார்த்ததில
பட்டமாய் பறக்கவிட்டு
எங்க நீ பறந்து போன
சின்ன புள்ள.........
ஒத்தக்கடை ஓரத்திலே
ஓரமாய் போறவளே
ஓத்துக்கிட்டு நீயும் வாடி
ஒய்யாரமாய் ஓடிடலாம்
வெக்கப்பட்டு நீ குனிந்தாள்
வெட்டு போடும் என் இதயம்
வெட்டிமகன் நான் இருக்க
வெரச நாம் போய்யுடலாம்
பனை மரத்து பயிங்கிளியே
பாசம் கொண்ட பால் நிலவே
பாசிமணியும் கொண்டு வந்தேன்
பாவிமக எங்க போன