திரிகூடராசப்ப கவிராயர் -------குறவஞ்சிப்பாட்டில்--------- திரிகூடலிங்கேஸ்வரர் -------- திரிகூடர்

குற்றாலநாதருக்கு திரிகூடலிங்கம் என்று பெயர் உண்டு. ஏறத்தாழ இதேபொருளில்தான். குற்றாலமலை மும்முடி கொண்டது என்பதனால் சிவன் இப்பெயர் பெற்றார். குற்றாலக் குறவஞ்சி எழுதியவர் திரிகூடராசப்ப கவிராயர். அந்த குறவஞ்சிப்பாட்டில் குறத்தி வசந்தவல்லியிடம் அவளை தேடி திரிகூடலிங்கேஸ்வரர் வரப்போவதாக குறிசொல்கையில் திரிகூடர் என்ற பெயரை ஸ்த்ரியை கூடும் திறன் கொண்டவர் என்று சொல்கிறாள்.



உன்னைப்போல எனக்கவனும் அறிமுகமோ அம்மே
ஊரும் பேரும் சொல்லுவதும் குறிமுகமோ?
பின்னையுந்தான் உனக்காகச் சொல்லுவேன் அம்மே அவன்
பெண்ணைச்சேர வல்லவன்காண் பெண்களுக்கரசே



என்ன சொல்கிறாள் என்று தெரிந்தும் வசந்தவல்லி பொய்யாகக் கோபம் கொள்கிறாள்.



வண்மையோ வாய்மதமோ வித்தை மதமோ என்முன்
மதியாமல் பெண்ணைச்செர வல்லவன் என்றாய்
கண்மயக்கால் மயக்காமல் உண்மைசொல்லடி பெருங்
கானமலை குறவஞ்சி கள்ளிமயிலி



என்று சீறிய பின் குறத்தி விளக்குகிறாள்



பெண்ணரசே பெண்ணென்றால் திரியும் ஒக்கும் ஒரு
பெண்ணுடனே சேரவென்றால் கூடவும் ஒக்கும்
திண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும் பேரை
திரிகூட நாதனென்றும் செப்பலாம் அம்மே

எழுதியவர் : திரிகூடராசப்ப கவிராயர் (30-Jul-19, 4:43 am)
பார்வை : 237

மேலே