திருவண்ணாமலையின் இயற்கை அழகு

திருவண்ணாமலையின் இயற்கை அழகு



திருஞானசம்பந்தர் தேவாரம்


தலம் : திருவண்ணாமலை
பண் : நட்டபாடை
முதல் திருமுறை

திருச்சிற்றம்பலம்

தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டித்
தூ மாமழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற
ஆ மாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார் வினை இலரே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacamban^thar thEvAram


thalam : thiruvaNNAmalai
paN : naTTapADai
First thirumuRai

thirucciRRambalam

thEmAN^kani kaDuvan koLa viDu komboDu thINDith
thU mAmazai thuRukal micai ciRu n^uN thuLi cithaRa
A mAm piNai aNaiyum pozil aNNAmalai aNNal
pUmAN^kazal punaicEvaDi n^inaivAr vinai ilarE.

thirucciRRambalam

Meaning of Thevaram


As the male monkey plucked the mango, the released branch
- touched with pure heavy rain - showering droplets on the
rock, (thinking that it is rain) the cow herds take shelter under
garden. Those who think of the Perfect feet adorned with
floral great anklet of the Reverend of such thiruvaNNAmalai,
they are free from karma!

பொருளுரை


ஆண் குரங்கு மாங்கனியைப் பறிக்க, விடுபட்ட மரக்கொம்பிற்
பட்டிருந்த பெருமழையானது, பாறை மீது சிறு துளிகளாகச் சிதற,
இது கண்ட பசுக்கூட்டங்கள் பொழில்களில் ஒதுங்கும்,
திருவண்ணாமலையில் உறையும் அண்ணலாரின் பூப்போன்ற
பெருங்கழல் அணிந்த செம்மையான திருவடியை நினைப்பவர்கள்,
வினை இல்லாதவர்கள்!

எழுதியவர் : Shaivam. (30-Jul-19, 6:01 am)
பார்வை : 62

மேலே