மனம்

அழுதாலுமே மனம்
அவள் நினைவினில்
அழுதிட வேண்டும்....

சிரித்தாலுமே மனம்
அவள் அருகினில்
வாழ்ந்திட வேண்டும்...

தொழுதாலுமே தினம்
அவள் பெயரினை
மொழிந்திட வேண்டும்....

இரித்தாலுமே விழி
அவள் முகத்தினில்
முழித்திட வேண்டும்...

அடைந்தாலுமே மனம்
அவள் கொடுக்கின்ற
வலியை இரசித்திட வேண்டும்...

இழந்தாலுமே மனம்
அவள் புன்னகையை
பார்த்து திருப்தி கொள்ள
வேண்டும்....

மனம் ..என் மனம்....
என்றுமே அவளின் சிம்மாசனம்...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (30-Jul-19, 7:07 am)
Tanglish : manam
பார்வை : 49

சிறந்த கவிதைகள்

மேலே