இதய அகழியில் புகுந்து
அழகான கண்ணாலே
அடிக்கடி எனைப் பார்த்தாளே
ஆகாய மழை அடித்ததுப் போல்
ஆழ் மனம் ஆர்ப்பரிப்பால் ஆடியதே
தேனோடு தேன் மதுரம் கலந்து
தோன்றிய கிரங்கடிக்கும் குரலால்
தெவிட்ட தெவிட்ட அழைத்து
தேவாமர்த வார்த்தையால் திகைக்க வைத்தாளே
ஆழ்ந்த அகழியில் தோன்றிய முத்துப்போல்
இதய அகழியில் புகுந்து இம்சைத்தாளே
முல்லைப் பல்லில் பவழம் சேர்த்தது போன்ற
வாயால் வாஞ்சையோடு முத்தமிட்டாளே
கருமேகக் கூந்தல் என் கரங்களில் தவழ
காற்றில் பறப்பதாய் என் உருவம் மகிழ
கனி இதழாளின் கண்டிபக் கண்கள்
காதல் கணைகளை என்னுள் சுகமாய் நுழைத்ததே.
------- நன்னாடன்.