உன் உதட்டோர புண்ணகை
உன் உதட்டோர புண்ணகை
கள்ளியே காதலை கண்களால் சொல்லிவிட்டாய்
செய்வதறியாது துடிக்குது என் மனது. மங்கையே,
மாலையில் பூக்கும் மல்லிகை பூவே, இளந்தென்றலே,
முழு நிலவே,
கொடி இடையாளே,
தேன் சிந்தும் செவ்விதழாளே,
அண்ண நடை பயிலும் வண்ண மயிலே, உன் உதட்டோர புண்ணகையும்,
உன் சின்ன கண் அசைவும்,
உன் மீது நான் உரிமை கொண்டாட செய்ய,
உன் இல்லாத இடையை தேடி பிடித்து, வளைத்து,
உன்னை என் மார்போடு அனைத்து,
உன் தேன் சிந்தும் இதழில் ,
என் இதழால் தேன் எடுக்க முயற்சிக்க,
திடீரென்று உன் உள்ளிருந்த நாணம் வெளிபட்டதால்,
என்னை விட்டு வேகமாக விலகி சற்று தூரம் ஓடினாய்,
பெண்களுக்கே உரிய வெட்கத்தால் உன் சந்திர முகம் சூரியன் போல் ஆனது
நெற்கதிர் கதிர் போல் தலை குனிந்து நிலத்தினிலே விரல்களால் கோலம் வரைந்தாய்
ஒரு நிமிடத்தில்
உன் உடல் மொழியில் எத்தனை மாற்றங்கள் ,
உன் முகத்தில் எத்தனை பாவங்கள், அத்தனையும் வானவில்லை போல் ரசனைக்கு உரியவை.
ஏன் இந்த வெட்கம்
நான் உன் பெயர் சொல்லி அழைக்க,
மீண்டும் ஒரு முறை
என்னை ஒர கண்ணால்
ஒரு பார்வை பார்க்கிறாய்
அந்த பார்வை ஒன்றே போதுமடி
மீண்டும் நான் உன்னை.....
வாழ்க பெண்னே. வளர்க நம் காதல்.
-பாலு.