மலரினும் மெல்லியாளே
செங்காந்தள் மலரினிலே
செதுக்கி எடுத்த சிற்சிலையே
செந்தாழம் பூவைக்கொண்டு
செய்து வைத்த வளை கரமே
பப்பாளி பூவைப் போல
பளிச்சென்று இருப்பவளே
அழகான அடுக்கு மல்லி
மணத்தை உடலில் கொண்டவளே
இனிப்பான நோயைத் தீர்க்கும்
ஆவரம்பூ போன்றவளே
பித்தாக ஆசைக் கொண்டேன்
பிச்சிப் பூவாய் வருவாயோ
- நன்னாடன்