காதல்

பூரண சந்திரனில் உன் முகப்பொலிவு
கார்மேகத்தில் உந்தன் கூந்தலின் சாயல்
துள்ளும் கயலில் உன் விழிகளின் அசைவு
வெற்றிலைக்கொடியில் உந்தன் சிற்றிடை
அன்னத்தின் நடையில் உந்தன் அழகு நடை
மயிலின் நாட்டியத்தில் உந்தன் ஆடலழகு
மலர்ந்த மல்லியில் உந்தன் மெல்லிய சிரிப்பு
வீசும் தென்றலில் உந்தன் அணைப்பின் சுகம்
இப்படி இயற்கையே நீயாய் இயங்க கண்டேனே நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Jul-19, 9:07 pm)
Tanglish : kaadhal
பார்வை : 244

மேலே