ஆசையினால் சிக்குண்டு

மனிதர்களே மனிதர்களே மதிப்புமிக்க மனிதர்களே
மகத்துவமான இப்புவியில் மனிதமே சிறப்பாகும்
தனித்துவமான அறிவினாலே தலைமையாய் இருக்கிறோம்
தழைத்தோங்கும் இயற்கையாலே செழிப்பாக வாழ்கின்றோம்

உழைப்பென்ற உன்னதத்தால் ஒருங்கிணைந்து வசிக்கின்றோம்
உற்சாக மனநிலையால் பொதுச்சேவை செய்கின்றோம்
உணர்வென்ற ஒன்றினாலே உறவினர்களை வளர்க்கின்றோம்
உடைமைகளை பகிர்வதினால் ஒருமைப்பாட்டை பேணுகின்றோம்

ஆணவத்தைக் கைக்கொண்டு அரியவுயிரை அழிக்கின்றோம்
ஆசையினால் சிக்குண்டு அறச்செயலை மறக்கின்றோம்
அசையாப்புவியை ஆண்டுடவே அசுத்தச்செயலை செய்கின்றோம்
அருமையானோர் மறைந்தாலும் அதனையேற்க மறுக்கின்றோம்

நவீனத்தைக் கைக்கொண்டாலும் நியாயமுடன் வாழ்ந்திடுவோம்
நாளுமறிவியல் செழித்தாலும் நன்மையொன்றே செய்திடுவோம்
நஞ்சாயான பணத்தினையே நயமாய் செலவழித்திடுவோம்
நாட்டினுயர்வை பேணிகாத்திடவே நன்றான எண்ணங்கொள்ளுவோம்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Jul-19, 9:14 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே