கையறுநிலை
ஓகோவெந் தையேமுன் னோர்செல்லப் பெண்ணிழக்கப்
போதாவோ கூற்றுவனின் பேராசை ... போட்டதேன்
பாசக் கயிறைமீண்டும் ஆசைமகன் மீதிலே
நாசமாய் போவன் நமனும்.
தேற்ற முடியாதும் மைஅறிவேன் தேறுக
தேவரீர் உம்மால் முடிந்தவரை... தேற்றும்
அவரீன்ற எச்சத்தை நாமென்ன சொல்ல
அவன்செ யலிது வெனின்