ஓடுவதை நிறுத்தி வந்த வழி பார்த்தேன்
நான் தேடும் பாதை
எதுவென்று அறியாமலே
காலம் நகர
மனதில் பக்தியில்லை
வாழ்வில் நேசமில்லை
தவறி விழுந்தவனை காட்க
ஆயிரம் உயிர் இருந்தும்
எனக்கு நானே என
அகங்காரம் கொண்டு
தனி ஒருவனாய் வாழ
ஒரு நாள் ஓடுவதை நிறுத்தி
வந்த வழி பார்த்தேன்
வெறும் நினைவுகள் மட்டுமே இருந்தன
சாதனைகள் எங்கே என கேட்ட மனதை
சிறிதும் கருணையின்றி ஏமாற்றி
விழிகள் துயில சென்றது