உயிரை பணயம் வச்சி திருடுறேன்

உயிரை பணயம் வச்சி திருடுறேன்
உத்தமனே உன்னைத் தானே இது நியாமா?
இருட்டில் ஒலி கேட்டு பதறுறேன்
இப்படி நீ பண்ணிட்டியே இது தர்மமா?

ஆளுங்க யாருமில்லா கடையாப் பார்த்து
நாய் நரி சுத்தாத நேரம் பார்த்து
மின்சாரம் எப்போ போகுமோனு காத்திருந்து
கடைக்குள்ள புகுந்தேன் நான் எலியைப் போல‌

சத்தம் போடாம ஆயுதம் எடுத்தேன்
வெளிச்சம் இல்லாத ஒளி கொஞ்சம் போட்டேன்
பணப்பெட்டி எங்கேனு பவிசாகத் தேடி
மிகுந்த மகிழ்ச்சியோடு பூட்டத் தான் உடைச்சேன்

நெஞ்சில் ஈரமே இல்லாத யாரோதான்
இந்தக் கடையை நடத்தும் முதலாளி போல‌
பஞ்சத்தில் இருக்கும் பல பேருமேல‌
கொஞ்சமும் அன்பே இல்லாத மனசுக்காரர் போல‌

முழுசா தொடச்சு வச்சிட்டார் பெட்டியை
என் உழைப்புக்கு மதிப்பு முட்டை தான்!
இது கேட்க சட்டம் நீதிமில்லையா?
கண்ணுல படலையோ கிழிஞ்ச சட்டை தான்!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (4-Aug-19, 12:50 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 90

மேலே