முடியுமா அது
மண்ணில் பிறப்பெடுத்து
மக்களோடு வாழ்ந்ததால்
மக்கள் நலனில் அக்கறை கொண்டு
மாயவனை உதவிக்கு அழைத்தான்
உதவிக்கு ஓடோடி வந்த இறைவன்
“அவனிடம் உன் நல்ல மனசுக்கு
இப்போதே உனக்கு மோட்சம்
கிடைக்குமென்று வரமளித்தான்”
மாயவனிடம் கூட ஏதும் கூறாமல்
மோட்சம் வேண்டாமென்று—ஓடி
மாயமாகிப்போனான் அவன்
மரணமுற்று பெற விரும்பாமல்
வாழும் நம் மக்களுக்கோ
உயிரோடு இருக்கும்போதே
மோட்சத்தை அநுபவிக்க ஆசை தான்
முடியுமா அது?