ஒரு நாள் காதல்

அது ஒரு அழகிய மழை காலம். ஆனா ரோடு ல போறவங்களாம் என்னமோ மழையை கண்ட படி திட்டி தீர்த்துட்டாங்க. ஒரு குடை குள்ள மட்டும் இருந்து ஒரு அழகான சிரிப்பு சத்தம் வந்தது. கொஞ்சம் லேசா தலையை எட்டி பார்த்தேன் அங்க ஒரு குழந்தை மட்டும் அழகா குடைல இருந்து சொட்டும் மழை துளியை ரசித்து ஆனந்தமாய் விளையாடி கொண்டிருந்தது. அத பார்த்ததும் மனம் ஏனோ லேசானது. நானும் அப்டியே மழையை ரசிச்சு பார்த்துட்டேய் நடக்க ஆரம்பிச்சேன்.
பின்னாடி இருந்து ஒரு குரல் வந்துச்சு "Excuse மீ சார் " இது உங்க purse ஆ கொஞ்சம் பாருங்க. "Thank u மேடம்" இது என்னுடையது தான். கொஞ்சம் நிமிர்ந்து அவள் கண்களை பார்த்தேன். சட்டென்று ஒரு மின்னல் வானில் அல்ல என் இதயத்தில். அவளும் என் கண்களை பார்த்தால் சட்டென்று ஒரு பாடல் "நெஞ்சை பூ போல் கொய்தவளே என்னை ஏதோ செய்தவளே" என் மொபைல் போன் ல கால் மேனேஜர் கிட்ட இருந்து. அப்டியே silent ல போட்டுட்டு ரெண்டு பேறும் பேசிட்டு நடக்க ஆரம்பிச்சோம்.எப்பவும் பிஸி ஆ இருக்க ரோடு ல அன்னைக்கு மட்டும் யாருமே இல்ல. வழி நெடுக்க இரு பக்கமும் மரங்கள் மிதமான காற்று இதமான தூறல். நான் மெதுவாக அவள் கைகளை பிடித்தேன் அவள் எதுவும் பேசவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் நடந்தோம் சட்டென்று அவள் என் பக்கம் திரும்பி "ஐ லவ் யூ" என்றாள். நானும் அவளை என் இரு கைகளால் தூக்கி சுற்றினேன். அவள் என் நெற்றியில் முத்தமிட்டாள். இப்படியும் காதல் வருமா என்று நாங்கள் இருவரும் மனதில் நினைத்து கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். திடிரென்று ஒரு சத்தம் பக்கத்தில் கைகளை பிடித்து நடந்து வந்த பெண்ணை காண வில்லை . இனி வாழ்ந்தால் அவளோடு தான் என்று இருந்த இதயம் கனத்தது. கண்களில் நீர் கசிந்தது தேடி தேடி பார்த்தேன் அவளை காண வில்லை. யாரோ என்னை அடிப்பது போன்ற உணர்வு. சற்று திரும்பி பார்த்தேன் தங்கை டேய் அண்ணா எந்திரி டா னு என்னை எழுப்பிட்டு இருந்தா. ஒஹ்ஹ் கனவா அதான பார்த்தேன்!!!!

எழுதியவர் : Ranith (5-Aug-19, 5:15 pm)
சேர்த்தது : Ranith
Tanglish : oru naal kaadhal
பார்வை : 587

மேலே