பவ்வு சவ்வு
அய்யா சோதிடரே வணக்கம்.
@@@@@
வணக்கம். வணக்கம். காலையிலேயே வந்திருக்கறீங்க. நல்ல தகவலாத்தான் இருக்கும்.
@@@@@
ஆமாங்க அய்யா. என் மனைவிக்கு நேற்று அதிகாலை அஞ்சு மணி, முப்பது நிமிடம் பத்து வினாடிக்கு ரட்டை பெண் குழந்தைகள் பொறந்தாங்க. அவுங்களுக்கு அவுங்க பொறந்த நேரம், ராசி, லக்கினப்படி நல்ல பேருங்களச் சொல்லுங்க அய்யா.
@@@@@@
இந்த இஷ்டலிங்கம் சோதிடர் பேரு வச்சா அந்தக் கொழந்தைகள் செல்வாக்கோட வளர்ந்து வாழ்வார்கள். ரண்டு பொருத்தமான பேருங்கள தேடிப்பிடிச்சு வைக்கணும். தமிழ்ப் பேருங்களா இருந்தா ஒரு பேருக்கு கட்டணம் ரூபாய் 500/-. பொதுவா இப்பெல்லாம் தமிழர்கள் யாரும் அவங்க கொழந்தைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்கிறதில்ல. தமிழாசிரியர்களே தமிழ்ப் பேருங்களக் கிண்டல் பண்ணற காலம் இது. அதனால உங்க ரட்டைக் கொழந்தைகளுக்கு பிறமொழிப் பேருங்கள வைக்கிறதுதான் அறிவுடமை. உங்க கொழந்தைங்க
ரண்டு பேரும் வருங்காலத்தில அவுங்கவுங்க பேரைப்பத்தி ஒருத்தருக்கொருத்தர் பேரைப் பாத்து பொறாமைப்பட்டு சண்டை போட்டுக்கக்கூடாது. அதனால அவுங்க நல்ல பேருங்கள என் ஞானத்தாலே தேடிட்டு இருக்கிறேன்.அஞ்சு நிமிடம் அமைதியா இருங்க. பேருங்க என்னோட மனத்திரையில ஓடுது. நான் பொருத்தமான ரண்டு பேருங்களத் தேர்ந்தெடுக்கணும்.
@@@@@@@@
(ஐந்து நிமிடம் சென்றபின் சோதிடர் இஷ்டலிங்கம்):-->
ஒரு பெண் கொழந்தைக்கு 'பவ்' (Bav)ன்னு வையுங்க. இன்னோரு கொழந்தைக்கு 'சவ்' (Chav) ன்னு வையுங்க. அவுங்க ரண்டு பேருடைய அதிர்ஷ்டத்தினாலே நீங்களும் உங்க மனைவியும் அமெரிக்கா அல்லது கனடாவுக்குப் போயி சொகமா வாழப்போறீங்க.
@@@@@
அதெல்லாம் சரிங்க சோதிடர் அய்யா. சனங்க எங்க கொழந்தைங்கள 'பவ்வு', 'சவ்வு'னு கூப்பிடுவாங்களே.
@@@##
அட போங்கய்யா. 'பவித்ரா' ( Pavithra)- ன்னு பேரு வச்சிருப்பாங்க. அந்தப் பேர 'Bavithra' ன்னுதானே கூப்பிடறாங்க. உச்சரிப்பு முக்கியம் இல்லை. பேருங்க ராசி லக்கினத்துக்குப் பொருந்ததுதானு மட்டும்தான் பார்க்கணும். சரி. நான் வருமான வரி கட்டற சோதிடர். உங்க கொழந்தைங்க ரண்டு பேருக்கும் நான் வச்ச பேருக்கு கட்டணம் ரூபாய் 10,000/-. ரண்டு பேருக்கும் சாதகக் கட்டணம் ரூபாய் 5,000/- காசோலையா (Cheque) குடுத்திடுங்க.
@@@@##
இந்தாங்க அய்யா. உங்க வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில காத்திருந்து உங்களப் பாக்கறாங்க. நீங்க எங்க பரம்பரை சோதிடரா இருக்கிறதாலே நான் எப்ப வந்தாலும் உங்களப் பாக்கலாங்கிற உரிமையைக் குடுத்திருக்கறீங்க. ரொம்ப நன்றீங்க அய்யா.
@@@@@@
சரி போயிட்டு வாங்க தம்பி அமிர்தலிங்கம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Bav = future.
Chav = five faced.