அந்த ஞானி ஒரு பச்சோந்தி பா
காதல் என்று சொன்னால் கல்லாலேயே அடிப்பேன்னு காதல் விரோதி ஒருத்தன் தெருவோரக் கீதம் பாடுகிறான் காயப்பட்ட இதயங்களுக்கு மருந்தாக.
உன் மடமையை என்னவென்பேன் காதலின்றி ஏதடா உலகம் என்றபடி வந்தாள் வள்ளியம்மைப் பாட்டி வரிந்து கட்டிக் கொண்டு.
ஆஹா! நமக்கு கவிதை மட்டிக்கிச்சுனு நானும் காதுகளைத் தீட்டிக் கூர்மையாக்கினேன் ஆர்வமாக.
காதலே உலகின் மிகப்பெரிய சாபம் என்றான் கர்வமாக.
சரிதான்! நீ காதல் பாதிக்கப்பட்டவனோ?
பைத்தியம் முற்றிப் போய் தான்பா திரிகிற! என்று கடந்து சென்றுவிட்டாள் வள்ளியம்மைப் பாட்டி வாயை மூடி.
ஐயோ! கவிதை கிட்டுமென்றிருந்தேன் ஏமாற்றமாகிவிட்டதே!
என்றபடி நொந்து போய் நான் அமர, அந்நேரம் காதல் விரோதியின் குரலில் தடுமாற்றம்.
தடுமாற்றம் நீங்கி தாளம் மாறியது, பாட்டு வரியும் மாறியது.
உன்னை பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்,.
அடே! என்னடா நடக்குது அங்க என்று சன்னல் வழி எட்டிப்பார்த்தால் மூனாம் விட்டு முத்துவை சுற்றி வந்து ஆட்டம் போட்டுக் கிட்டே அந்த காதல் விரோதி ஆகிவிட்டான் அவளின் காதலனாக.
தெருவில் ஒரே ஒரு ஞானி இருந்தான்,
அவனும் அந்த நொடியே மடிச்சுப் போய்ட்டான்.
ஞானியா நிலைக்கிறதுக்கெல்லாம் வைராக்கியம் வேணும்பா.