உறுப்பில் நவீனத்தை
காற்றுக்கு இணையாய் வேகம் செல்லும் மனிதா
கருவை வேகமாய் வளர்க்க கருதியுள்ளாயா?
உடலில் அழகிய படம் வரையும் நீயே
குருதியில் நிறத்தை மாற்ற நினைத்ததுண்டோ?
கவலையில் உயிரை துறக்க நினைக்கும் நீ
களிப்பில் உயிரை பிரித்து இனம் கண்டதுண்டோ?
நாக்கு என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால்
அறுசுவையும் அரிதாகி இருக்கும் என்பது புரியுமோ?
தங்கமும் பணமும் இனம் மதம் கடந்து
தழைத்து செழித்து சேமிப்பறையில் உறங்குவதெப்படி?
ஏதேனும் மதத்தை நீ சார இறை எண்ணியிருந்தால்
எங்கேணும் உடலில் குறியிட்டியிருக்க வேண்டுமல்லவா?
உடையில் நாகரீகம் காட்ட நினைக்கும் மானிடருக்கு
உறுப்பில் நவீனத்தை புகுத்தாத இறை சரியோ?
------ நன்னாடன்.