புத்தகம்

உன் மீது காதல் கொண்டு
உன்னை தொட்டு,தடவி,
உன் வாசம் சுவாசித்து ஒவ்வொரு பக்கமாய் புரட்டுகிறேன்
உன் விருப்பம் அறியாமலே

இருந்தும்
நீ என்னை
உதாசினப்படுத்தவில்லை, உற்சாகப்படுத்துகிறாய்
ஆத்திரம் கொள்ளவில்லை
என்னை ஆற்றுப்படுத்துகிறாய்
கொஞ்சம் கூட பயம் கொள்ளவில்லை
என்னை பக்குவபடுத்துகிறாய்
எனக்குமட்டுமல்ல,
உன்னை காதலிக்கும்
அத்துனை பேருக்கும் இதே
சுபாவத்தை காட்டுகிறாய் அதற்காகவே
உன்னிடம் சரணடைய விரும்புகிறேன் நான்.

உன்னை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தால்
எனக்கு சலிப்பு வருவது உண்மைதான்
அந்த சலிப்பு கூட தற்காலிகமானதே தவிர
நிரந்தரமானது இல்லை.

உன்னை ஈன்றது
யாரென்று தெரியவில்லை
மன்னித்து விடு என்னை
உன்னை விட அவரையே
அதிகம் நேசிக்கிறேன்.

#புத்தகம்

: -ஜெ.ஜெயசூர்

எழுதியவர் : ஜெ.ஜெயசூர் (8-Aug-19, 10:35 pm)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
Tanglish : puththagam
பார்வை : 90

மேலே