தாமரைக் கண்ணாள் அவள்
தாமரைக் கண்ணாள் அவள்
மூடிய இமைத் திறக்க
அலர்ந்த தாமரைக் கண்ணியானாள்.
அவள் அதரங்கள் மௌனத்தால்
மூடி இருக்க அவள் கண்களோ
திறந்து புன்னகைத்து என்னைப் பார்க்க,
நான் என்னவளே ஏன் இந்த வாய்த் திறவா
மௌனம் இன்றுனக்கு என்று கேட்க
அவள் தாமரைக் கண்கள் மீண்டும்
திறந்து மூடி திறந்து பேசியது
சிரித்ததோ கண்கள் என்று நான் எண்ணும்படி,
அவள் அதரங்கள் மட்டும் மொட்டாய்
விரியா மலராய் மௌனத்தால் என்னை வாட்ட
ஆடி மாதத்தில் என்னவள் சக்திக்கு
மௌனத்தால் துதித்து நேர்த்திக்கடன்
ஏதேனும் செய்கிறாளோ தெரியலை எனக்கு
மௌனம் பார்வையால் பேசியது
எந்தன் காதலியின் கண்களாய்