மண் உயிர் மதம் மயிர்
மண் உயிர் மதம் மயிர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(மயிர் போனால் மீண்டும் வளரும் உயிர் போனால் மீண்டும் வாராது)
மண்ணைக் கொன்று மதங்கள் போற்றும்
... மனித மேதைகாள்
கண்ணை விற்றுக் காட்சி வாங்கும்
... கடமை வீரர்காள்
புண்ணி யத்தைப் புகுத்த எண்ணிப்
... புகையில் வேகுறீர்
விண்ணி றங்கி வீழ்தல் போல
... வியக்க வைக்கிறீர்
மண்ண ழிந்து மறைந்த பின்னே
... மதமும் ஏதடா
உண்டி ருக்க உயிரி ருக்க
... உதவி மண்ணடா
... மீ.மணிகண்டன்
#மணிமீ
08-Aug-2019