காதல்

ஆடு மயிலே என்றால் ஆடாது மயில்
கூவிடு குயிலே என்றால் கூவாது குயில்
இனிய இயற்கை கார்மேக மேடைத் தந்தால்
மயிலும் ஆடும் தன் இச்சையாய் குயிலும்
பாடும் மகிழ்ந்து தன் மனம்போல் - மங்கையும்
அதுபோல தன் மனதை ஒருவனுக்கு
தந்துவிட்டால் மட்டுமே தன் மனம் நெகிழ்ந்து
காதல் கொள்வாள் காதலனும் கூடி
காதல் இன்பம் நுகர இச்சைக்கினியமுதாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Aug-19, 9:35 am)
Tanglish : kaadhal
பார்வை : 130

மேலே