அலையும் ஜீவன்

அலையும் ஜீவன்
அனுபவம்தேடி அலையும்ஜீவன்
முதுமை வந்தும் முடியாத்தேடல்
இன்பம் வேண்டித் துன்பம் தவிர்க்கும்
இளமையில்கனவு முதுமையில்கலக்கம்
கருவினில் தனிமை கல்லரையில் தனிமை
இடையில் ஏனோ வேண்டுது ஓர் துணை
தூரப்பயணம் முடிவின்றி நீளும்
பயணம் முடியா சமயம் மரணம்
மரணம் முடிவா, மாறும் யாத்திரையா?
மனதளவியங்கும் மாயம் பொய்யா?
தினம் கணம் தொடரும் வாழ்விது என்ன?
ஞானம் பெற்றோர் மொழி விளங்காப்புதிர் ஏன்?
விளக்கம்கேட்டிடில் கலக்கம் மிச்சம்
கண்கட்டுப்பயணமோ கருத்தில்லா கானமோ!
உணரும்வண்ணம் ஒன்றும்இல்லை
தெளிவுகாண வழி எதும்உண்டோ
வையத்தாரே விளங்கிடின் புகல்வீர்!

எழுதியவர் : இருகரை சாத்தன் (12-Aug-19, 9:37 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : alaium jeevan
பார்வை : 92

மேலே