கெஞ்சவா கொஞ்சவா

மச்சான் மச்சான்
என் ஆசை மச்சான்.

தாகம் என்று
தண்ணீ கேட்டு
வந்து தனியே
இருந்த என்
நெஞ்சினிலே
காதலை
விதைச்சான்.

மோகத்தை
தங்கவச்சான்
அன்று முதல்
நானாக நான்
இல்லை.

தவிக்க வச்சான்
தனிமையில்
துடிக்க வச்சான்
தோழியரை
வெறுக்க வச்சான்.

வழிமேல் வச்ச
விழி மூடாமல்
இருக்க வச்சான்.

ஏதேதோ ஆசைகள்
நெஞ்சினிலே
தோணுவது போல்
விதைச்சான் .

இதயத்தில்
அவன் முகத்தைப்
பதிய வச்சான் .

மிச்சம் மீதி என்ன
சொல்ல மச்சான்
மச்சான் என்று
தனியே புலம்ப
வச்சான்.

நான் அவனைக்
கண்டால்
கெஞ்சவைப்பான்.

கொஞ்ச வைப்பான்
வஞ்சி என்னை
பஞ்சணை மேல்
அமர வைப்பான்.

சீ சீ என்ன இது பெரும்
கற்பனையடா மச்சானே.

பஞ்சி மேல்
நெருப்பாக
எரிகின்றேன்
மிஞ்சி போடாமல்
ஏங்க வச்சாயே.

நிச்சயம் செய்ய
கச்சிதமாக ஓடி வா
மச்சானே.

மச்சானே மச்சானே.
உன் மேல ஆசை
வச்சேனே. நான் வச்சேனே.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (12-Aug-19, 12:42 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 107

மேலே