உண்மைக்கு உதவும் பிம்பம்

நீ என் எல்லை கடந்தருகே வந்தாய்.
என் காற்றுக்கு உன் வாசம் தந்தாய்.
என் வாசம் தன்னை மறக்கடித்தாய்.
என் தோட்ட வண்ணத்துப் பூச்சிகள்
தங்கள் நிறங்களை மாற்றிவிட்டன.
உன் கன்னத்தில் உரசும் நேரத்தில்
காட்சிக்குப் பொருந்த வேண்டுமாம்!
எங்கள் வீட்டு நாய் எந்நேரத்திலும்
தன் வாலை உன் திசை நோக்கியே
வீசி வீசி, நிமிரக்கூடுமோ என்பதாய்.
இல்லாத புதுமை தோன்றுகின்றதே!
இங்கு சில சிலைகள் அபினயித்து
உன்னைப் போல் நடிக்கப் பயிலும்.
கற்களுக்கு எங்கிருந்து இப்படி ஒரு
கற்பனை வந்து சேர்ந்ததோ? ஆகா!
என் கணினிகளுக்குள் மென்பொருள்
உன் தொடுகைக்கேற்ப இன்னமுமே
மென்மை கண்டு தன்னை உயர்த்தி
மெருகேற்றிக் கொண்டது புதுமை!
என் பேனாக்களில் கலை சிறந்த
எண்ணங்களை மையாக்கி ஊற்றி
என்னையும் கவியாக்கினாய் நீயே!
நானே கற்ற நல்ல ஓவியம் உண்டு.
அருகில் வா என் இனிய படாமே!
நான் உன்னிலேயே வரைந்து மகிழ
என்னில் அதன் பிம்பம் காண்பாய்!

எழுதியவர் : திருத்தக்கன் (12-Aug-19, 11:16 am)
சேர்த்தது : திருத்தக்கன்
பார்வை : 142

மேலே