வலியிலும் சிரிக்கிறேன்
எனக்குள்ளும்
ஆயிரமாயிரம் வலிகள்
ஆனாலும் அழ நினைத்தில்லை
சிரிக்கவும் மறந்ததில்லை
வாழ்க்கையை நானும்
மூன்றடியில்
அளந்து பார்த்தேன்
ஒரு அடியில் துரோகச்சுவடுகள்
மற்றொரு அடியில் கண்ணீர்த்துளிகள்
இன்னுமொரு அடியில் காலச்சுமைகள்
நினைத்து நினைத்து அழுது
என் மனதுகூட பழுது
விடியுமா நல்ல பொழுது
இறைவா என் விதியை
திருத்தி எழுது