வெங்காயம்

இறுக்கி கட்டிய பொட்டலத்தில்
லாலாகடை இனிப்பு

பிரித்துப் பார்த்து சுவைத்த

நினைப்பு நினைவில் நிற்க

நீ இறுக்கிகட்டி சுருட்டி நின்ற
கோலம்

லாலாகடை இனிப்பு நினைவு
கூட்டிவர

சுவைத்துப் பார்க்கும் ஆசையில்
பிரித்துப் பார்க்க

சிறு வயதில் நான் பார்த்த
நிர்வாணமே

பருத்து பெருத்து கருத்திருக்கு

வெங்காயம்..,

எழுதியவர் : நா.சேகர் (14-Aug-19, 7:12 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vengaayam
பார்வை : 52

மேலே