இறைவன்
நேராக நேர்பாதையில் இருக்கும் பொருளை
நம் கண்களால் ஒரு கல் தொலைவு parka இயலும்
ஒரு போதும் அதற்குமேல் உள்ள காததூர பொருளைக்
காண இயலாது …… வானில் சந்திர சூரியரைப் பார்க்க
முடியும்…. அதற்கும் தொலைவில் உள்ள நட்சத்திங்கள்
சிலவற்றை மின் மினி பூச்சிகள்போல் காண்கின்றோம்
அவற்றிற்கும் அப்பால் உள்ள கோள்களும் நட்சத்திரங்களும்
நம் கண்களுக்கு தெரிவதில்லை
தெரியவில்லை என்பதால் அவை இல்லாமல் போகுமா
கண்ணுக்கு தெரியா இறைவன் …… நமக்கருகிலும்
காணமுடிவதில்லை , தூர இருந்தாலும்
ஆனால் அவன் இருக்கின்றான் நல்லவரைக் காக்க
தீயவரை வதைத்திடவே