என் கண்ணன்

அவனைப் பற்றினேன் கட்டி அணைத்தேன்
முத்தமிட்டேன் அவனும் என்னை இறுகப்பற்றி
கழுத்தில் கைகள் அணைக்க முத்துமாரி பொழிந்தான்
காதில் ஏதோ சொன்னான் பாடினான் ?
நான் சிரித்தேன் என் வசம் இழந்தேன்
பேரின்பத்தில் மூழ்கினேன் என்னை மறந்தேன்
மீண்டும் மயக்கத்திலிருந்து மீள, பார்த்தேன்
அவன் என் மடியை விட்டு இறங்கி எங்கோ
மாயமாய் சென்று மறைந்தான் ………
ஆம் அவனே சின்ன கண்ணன் பால கிருட்டிணன்
நீலவண்ணன் காதில் குண்டலம், தலையில்
மயில் இறகு, மஞ்சள் பட்டாடை உடுத்தி
சிற்றிடையில் காப்புக் கயிறு -சிறு கால்களில்
சிலம்பு என் மார்பில் மோதி கலீர் கலீரென
ராகம் பாட ….. கள்ளச்சிரிப்போடு அவன்
என் கழுத்தைக் கட்டிக்கொண்டான் ……
முத்தம் கொடுத்தான் முகில்வண்ணன் ...



இதுவல்லவோ ஜென்ம சாபல்யம் !
இது கனவா நெனவா தெரியவில்லை
என் உள்மனம் சொன்னது இது கனவல்ல
' நீ கண்டது நிஜமே' என்று….. இப்படித்தான்
என் கண்ணனைக் காண விழைந்தது என்
நெஞ்சம்,நானும் மனதிற்குள் அவனையே
நினைந்து துதித்து கூவி அழைத்தேன்
என்னை ஆட்கொண்டான் கண்ணன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
என் காதல் dheivaththai நாராயணன் அவனை
எனக்கு 'பறைதருவான்' ' அவனே என்றுணர்ந்தேன் நான்.
குழந்தை வடிவில் வந்து ஆனந்தமாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Aug-19, 5:02 pm)
Tanglish : en Kannan
பார்வை : 106

மேலே