வள்ளுவர் காலத்தில் சாதி
இட்டார் பெரியோர் இடாதார் இழிக்குலமாம்
பட்டாங்கில் உள்ளதென்றாள் ஔவையும் -- தட்டாது
கட்டிய பாட்டில்நம் பாரதியும் பட்டியலில்
இட்டசாதி ஆண்பெண் இரண்டு
ஔவைசாதி ஒவ்வாதென் றாளில்லை உண்மையிது
செவ்வியன்று செய்த்தொழில் சாதிநீக்க---- எவ்வாறு
செய்ததோ செங்கோல் முறையதுவாம் வள்ளுவன்சொல்
செய்த்தொழில் மேன்மைபிறப் பல்ல
சாதியைப் பற்றி அந்நாளில் குறை நிறை பேசி வந்த சமயம் ஔவை அதைப்பற்றி
விளக்கியுள்ளார் என்று தோன்றுகிறது. சாதி ஒழிப்புக்கு அப்போது சந்தர்ப்பமே
ஏற்படவில்லை போலும். சாதியை விளக்கவந்தவர். ஈகை செய்தவனே உயர்சாதி என்றும்
எந்த ஜாதியிருப்பினும் உதவி செய்யாதவன் கீழ் சாதி என்கிறார். இது அவரின் அறிவுரை
யாகும்.
ஆனால், வள்ளுவரோ பிறப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைகிறது ஆனால்
அவன் மேற்கொள்ளும் தொழிலை வைத்தே அவரின் சிறப்பு மாறு படுகிறது.
சிறப்பும் மேன்மையும் எல்லோருக்கும் பொதுவாக அமையாது.
ஆனால் எல்லோரும் மனிதப்பிறப்புதான்.
ஆனால் அவன் பெருமைக்குரிய செயல் எதைச் செய்தான்?
அல்லாது கொடுந்தொழில் ஏதும் புரிந்தானா? என்பதைக் கருத்தில் கொண்டு தரவேற்றுமைக் கொள்வார்.
செய்தொழிலை அடிப்படையாக கொண்டே அன்று சாதி அமைந்தது.
மன்னர் அரசுத் தொழில் போர் எனவும், கொல்லன் போர் வாள் செய்தான்.
அடைப்பக்காரன் அனைவருக்கும் முடி திருத்தினான், குயவன் பானை சட்டி செய்தான்.
இப்படி ஒவ்வொவ்வரும் மக்களுக்குத் தேவையானதை செய்தார்கள். அவர்களை ஏன் தாழ்த்தி பேசப் போகிறார்?
மன்னர் மேம்பட்டவர், அவரே நியாயதிபதியும் கூட. மந்திரி அவர்கடுத்து சிறப்பு பெற்றார்.
இப்படி ஒருவருக்கொருவர் சிறப்பில் ஏற்றத்தாழ்வு இருந்தது. அதையாரும் குறை கண்டாரில்லை.
புறநானூற்றில் கீழ்பால் உள்ளவன் அறிஞனாக அவன் அறிவுரையை அரசனும் கேட்டு நடப்பானாம்.
"கீழ்பா லொருவன் கற்பின் மேல்பாலொருவன் அவன் கண் படுமே
அறிவுடை யானொடு அரசும் செல்லும்."