விளக்கம் சிவ விந்துவும் சக்தி யின் நாதமும்

சிவ விந்துவும் சக்தி நாதமும் என்ற வெண்பாப் பாக்கள் இரண்டிற்கு இங்கே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
1.. புலவர்கள்நிலவை பெண்ணின் முகத்திற்கும் மேனிக்கும் உவமை காட்டுகிறார். .ஆனால் யோகநிலையில் இடகலை பன்னிரண்டு நாழிகையாகவும் பிங்கலை பதினாறு நாழிகை எனவும் சுழுமுனை நான்கு நாழிகை எனவும் குறிக்கப்படுகிறது. சித்தர்களின் விஞ்ஞானம்இருபத்திஐந்து பிரிவுகள். இதில் எல்லாவற்றிலும் சூரியனைப் பெண்ணாகவும் சந்திரனை ஆணாகவுமே குறிக்கப்பட்டுள்ளது.
௨ .சூரியன் நெருப்புக் கோளம் .தேயு என்பதும் நெருப்பு க் கோளம். மூச்சுக்களையிலும்
சூரியனாடியை சக்தி நாடி என்பர் சந்திரன் நாடியை சிவனாடி என்பர். தேயு எனும் நெருப்புக் கோளம் குறையாது தேயாது அது சக்தி எனும் பெண். சந்திரன் ஆணாம் அது தேயும்.,குறையும் அமாவாசை ஆகும். வளர்ந்து பௌர்ணமி ஆகும். ஒரு குறிப்பிட்ட வளர்பிறையி லும் பௌர்ணமியிலும் சூரியன் என்கிற பெண்ணும் சந்திரன் என்னும் ஆணும் கலவியல் புரிந்திட அதன் தாக்கம் பூமியின் களர் நிலத்தில் பூமியின் துளிர் மண்ணில் நாத விந்துக்கள் எனும் அண்ட பிண்டங்கள் உற்பத்தியாகும். இவைகள் நாதம் என்றும் நாத்த்தின் விந்து என்றும் பிரித்து எடுப்பர் யோகிகள் எனும் சித்தர்கள்.

இதைப்போல குறிப்பிட்டத் தேய்பிறையில் அமாவாசை தினத்தில் சிவசந்திரன் சூரியப்
பெண்ணின் சேர்க்கை யில்லாது தனித்து இருக்குங்காலையில் தனிச்சந்திரநின்தாக் கம் பூமியில் ஏற்படுத்தி சந்திரனின் விந்துவை பூமியில் அநேக இடங்களில் தியச் செய்கிறார். இந்தவிந்து கிடைத்தற்கரிய அரு மருந்தாகும். இப்பொருளே காய கட்பப் பொருளாம். சிலர் முன் சொன்ன நாதத்தை சேகரித்தாலும். விந்துவை சேகரிக்க வேண்டிய முறை தெரியாது தவறான வற்றை விந்துவென்று சேகரித்து நொந்துபோவர்கள்.அதனால் குருமருந்தை செய்ய முடியாத தோற்றுப் போவர்.. ஆக
சூரிய தாக்கத்தால் பூமியில் சக்தி நாதமும் சந்திரனின் தாக்கத்தா சிவ விந்துவும் கிடைக்கிறது. இவை எத்தர்களுக்குக் கிடைக்காமல் ஏ மாற்றுமாம். இந்தவிந்து நாதங்கள்
இயற்கையின் மனிதஉயிர், தாவரப் பயிர் மிருகம் பறவை ஊர்வன. நீர்வாழ் வன இவை
களின் உற்பத்திக்கும் வாழ்வதற்கு மான இன்றியமையாத பொருளாகும்..விந்து நாதமின்றி உலகமமையாதாம்.

எழுதியவர் : (17-Aug-19, 9:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 70

மேலே