அஞ்சல் அட்டை

அஞ்சல் அட்டை

இடம்: தமிழ்நாடு.
நாள்: 21.8.2019.

என் அருமை தோழமைகளே! இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.மிகவும் துரிதமாய் விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவரும் இக்காலத்தில் புதுமையாய் உருவாக்கப்பட்டவை பழையனவற்றை பின்னுக்கு தள்ளத்தான் செய்கின்றது.எனினும் பழைமையும் ஒரு சுகமே!உதாரணமாக, 'அஞ்சல் அட்டை '.ஆம் மற்றொருவர் தெறிவிக்கும் வாழ்த்துக்களை கட் காப்பி செய்து அனுப்பப்படும் மின்னஞ்சலை விட, நம்மவர்க்கு சுயமாக எழுதி வெறும் எழுத்துக்களை மட்டுமல்லாமல் நினைவுகளோடு எடுத்து செல்லப்படும் அஞ்சல் படிவமும் ஓர் சுகமே! முன்பெல்லாம் தபால்காரர்,"பாட்டி! உங்கள் பெயரனிடமிருந்து கடிதம் வந்திருக்கு" என்றாலோ "ஐயா !உங்க பொண்ணுகிட்ட இருந்து தந்தி வந்திருக்கு "என்றாலோ அவர்கள் முகத்திலும் உள்ளத்திலும் தோன்றும் புன்னகைக்கு தபால்காரரே வெளிச்சம்!. விழாநாட்களில் நூற்றுக்கு மேற்பட்ட வாழ்த்தட்டைகள் மின்னஞ்சலில் பெற்றாலும் ஒரு அஞ்சல் அட்டையில் வாழ்த்து பெறுவதும் சுவாரசியமே ! .எனவே, வருடம் ஒருமுறையாவது நமக்கு பிடித்தவருக்கு வாழ்த்துக்களை செல்போனின் முகப்புத்திரையில் நோட்டிபிகேஷனாக சென்றடையாமல் சுவாரஸ்யமாக எண்ணங்களும் நினைவுகளும் மலரும் வண்ணம் அஞ்சல் மூலமாக அவர்களுக்கு தெரியப்படுத்தலாம் என்பதற்காக எழுதபட்ட என்னுடைய வேண்டுகோள் கடிதம் இது .


இப்படிக்கு ,
ஞானப்பிரகாசம்.

எழுதியவர் : ஞானப்பிரகாசம் (21-Aug-19, 3:51 pm)
Tanglish : anjal attai
பார்வை : 76

மேலே