அமைதி எங்கே போனது

'கத்தி இன்றி, ரத்தமின்றி ' போராட வழி
காட்டிக் கொடுத்தார் அண்ணல் காந்தி

அது அந்த காலம் …...ஆம் அமைதியாய்
போராடி அநீதியை எதிர்த்து உயிர்ச்சேதமின்றி
வாழ வழிதேட அண்ணல் சொன்னது அன்றைய
புது யுக ;கீதம்; அதில் நமக்கும் வெற்றிகண்டு
தென் ஆப்ரிக்க மக்களுக்கும் ' நிற வெறியரை
எதிர்த்து வெற்றிகண்டிட வழி வகுத்தார் அண்ணல்,
இன்றோ உலகம் போகும் போக்கே புரியவில்லை
எங்கும் க்ரோதம், ரத்த வெறி ஒருவரை ஒருவர்
அழித்துக்கொள்ள அப்படியோர் ஆத்திரம்
இவர்கள் கண்களுக்கு குழந்தை, பெரியோர்
பெண்கள், ஊனமுற்றோர், பிரசவத்திற்கு
காத்திருக்கும் பெண்கள் என்பதெல்லாம்
தெரியாது கண்ணிருந்தும் அந்தகராய்
கொலைவெறியோடு அலையும் ரோபோக்கள் ……
வன்முறைக்கற்று அதையன்றி வேறொன்றும் தெரியா 'ரோபோக்கள் ' இவர்கள் …...பிறரை அழிக்க
தம்மையே அளித்துக்கொள்ளும்' மனித ரோபோக்கள்.
எம்மதமும் இவ்வுலகில் 'ரத்தவெறி' போதிக்கவில்லை
பின் வீணே மதத்தின் பெயரில் ஏன் இந்த
வன்முறைகள்……
வன்மமும் வஞ்சகமும் பிறரை அழித்தாலும்அதை ஏவி விடுவோரையும் அழித்திடும் ஓர்நாள்
எப்படி சூனியக்காரன் தானே அழிவதுபோல்!


சென்ற நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி
இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறது
உலகில் எங்கோ ஏதோ ஓர் மூலையில்
போர் …...போரிட்டோர் எதைக்கண்டார்
யாது இவர்கள் வெற்றி…..அவர்களுக்கே தெரியாது
புது உலகு செய்வோம், புதியதோர் உலகு
காண்போம், அங்கு நாம் காண்பது எங்கும்
அமைதி பூங்காக்கள் ….. எல்லோரும் எல்லாம்
பெற்று ஒற்றுமையாய் அமைதியை சுவாசித்து
அமைதியில் வாழ்ந்திடுவோம் அதுவே
எம்மதமும் விரும்புவது …..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Aug-19, 12:48 pm)
பார்வை : 140

மேலே