மழைக்கால காதல்

நேற்று நான்
மழையில் நனைந்தப்போது
நீ உன் துப்பாட்டாவில்
எனக்கு தலை துவட்டி விட்டாய்...
என் மனசு தினமும்
உன் அழகில் நனைகிறதே
இதை எதைக்கொண்டு
துவட்டிவிடுவாயோ...

மழைமீது எனக்கு பொறாமை
நான் உரசாத உன் அழகை
அது உரசிப்பார்க்கிறதே...

நீ மழையில் நனையும்போது
நான் அதிசயமாக ஆச்சர்யமாக வியந்து பார்த்தேன்
ஒரு நிலவு எப்படி மழையில் நனையுமென்று...

அட... அடைமழைக் கூட
அழகை ரசிக்கிறதே
பூமியில் உன்னொருத்தியின்
அழகை ரசிக்கவே வான்மழை
வந்துப்போகிறது...

தொல்காப்பியனை
தேடுகிறேன்
நீ மழையில் நனையும்போது
பெருக்கெடுத்து ஓடும்
உன் அழகிற்கு
புது இலக்கணம் ஒன்றை எழுத...

என்னவளே...
மழை உனக்கு பிடிக்கும்
என்பதனாலே இறைவனிடம்
நான் மழைவேண்டி கையேந்துகிறேன்...
.
பாவரசு செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (20-Aug-19, 5:49 am)
Tanglish : mazhaikkala kaadhal
பார்வை : 219

மேலே