கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 4

சுஜி: யார்டா நீ? எங்கிருந்து வந்த? வெறும் ரெண்டு வாரம். என் வாழ்க்கையையே புரட்டி போட்டுட்டியே. நான் ஏண்டா இப்படி உன் மேல பைத்தியமா இருக்கேன்? என்னடா பண்ண என்ன?

அக்கீரின் முகத்தை தன் இருக்க கரங்களால் பற்றியப் படி கேட்டவளை, தன் உதடுகள் குவித்து முத்த சைகை செய்தான் அக்கீர். ஸ்தம்பித்து வெட்கப்பட்டாள் சுஜி.

சுஜி: அக்கீர், பிளீஸ் நான் இப்படிலாம் இல்ல... வெட்கம்னா என்னானு கேப்பேன். ஆனா, என்னையே வெட்கப்பட வெச்சிட்ட... ஐ ஹெட் யூ...

முகத்தை மூடி சிணுங்கியவளை அவள் அணிந்திருந்த டிஷர்டடை பிடித்து அவனை நோக்கி இழுத்தான். சுஜியும் அவன் இழுத்த இழுப்பிற்கு அவன் அருகில் சென்று சேர்ந்தாள். அவன் இருக் கால்களையும் சுஜியின் கால்களை சுற்றி கட்டிக் கொண்டான். அவனது வலது கையை அவளின் இடையையும் அவன் இடது கை அவளின் கூந்தலையும் வருடிக் கொண்டிருந்தது.

அக்கீரின் கைத்தொலைப்பேசியில் காதல் பாடல்களின் இசை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லாம் அவனின் கித்தாரின் வாசிப்பிற்கான இசை மைனஸ்கள். மெதுவாய், அந்த இரவில், குளிரிய காற்றில் மிக துல்லிதமாய் ஒலித்தது என்னடி மாயாவி இசை.

அக்கீர்:

என் தலைக்கேறுற
பொன் தடம் போடுற
என் உயிராடுற
என்னடி மாயாவி நீ

என் நிலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நிஜம் காட்டுற

அக்கீர்: பாப்பா...ஐ லவ் யூ டி.... என்னடி மாயாவி நீ ?

சுஜி: மாயாவி இல்ல.. குட்டி பிசாசு...

அக்கீர்: சிரிக்காதடி.

சிரித்தாள் சுஜி. அள்ளி முடியா அவள் கூந்தலை தன் கழுத்தின் ஒரு புறமாய் கொண்டு வந்து சேர்த்தாள்.

அவள் அப்படி செய்யும் போது, அக்கீர் அவனது கண்களை மூடிக் கொண்டு வலது கையை அவன் நெற்றியில் வைத்தவாறு,

அக்கீர்: ஐயோ... அப்டி செய்யாதடி..

சுஜி: என்ன செய்யாத?

அக்கீர்: அதான், தோ இந்த முடியை இப்படி ஒரு சைட்டா கொண்டு வராத

சுஜி: ஏன்? அதுல என்ன பிரச்சனை?

அக்கீர்: செம்ம அழகா இருக்கடி.. பார்த்துகிட்டே இருக்கலாம். நீ ஏண்டி, என் ஊர்ல பொறக்கல?! என் வீட்டிற்கு எதிர் வீட்டுல இல்ல?! என் காலேஜ்ல படிக்கல?!

சுஜி: உன் வீட்டிற்கு எதிர் வீடா இருந்திருந்தா இந்நேரம் உங்க அண்ணன் காதலியா ஆயிருப்பேன். உன் காலேஜா இருந்திருந்தா நீ என்ன திரும்பி கூட பார்த்திருக்க மாட்ட. அதனாலதான், இவ்ளோ தூரத்துல இங்க வந்து பொறந்துருக்கேன்.

அக்கீர்:எவ்ளோ திமிர் உனக்கு? மணி எத்தனை? விடியக்காலை மூணு. உனக்கு எங்கையாவது பயம் இருக்கா ஆண்டி...

சுஜி: என்னது ஆண்டியா ?

அக்கீர்: ஆமா, நாங்க கல்யாணம் ஆனா பொண்ணுங்கள ஆண்டின்னுதான் சொல்லுவோம்.

சுஜி, அக்கீரை முறைத்து பார்த்தாள்.

சுஜி: ஆமா, நான் ஆண்டிதான். நீதான் குமாரனாச்சே உன் வயசு பொண்ணு பின்னாடி போய் சுத்த வேண்டியதுதானே. கல்யாணம் ஆனா பொம்பளை என் பின்னாடி கொஞ்சங் கூட வெட்கமே இல்லாமே எதுக்கு ஐ லவ் யூ ஐ லவ் யூ னு சொல்லி என்கிட்டையே அலைஞ்சிகிட்டு வர....

அக்கீர்: என்னாப் பண்றது... இந்த ஆண்டி, ஆண்டி மாதிரியா இருக்கு. செம்ம அழகால இருக்கு.

சுஜி: போதும் போதும்... தாங்கல. இனிமே ஆண்டி கிண்டினு சொன்ன அப்பறம் நான் கடுப்பாயிடுவேன்... சொல்லிட்டேன்.

அக்கீர்: சரி வீட்டிற்கு கிளம்பலாம் வா...

சுஜி: இப்போ திடிர்னு என்னாச்சி? ஏன் என்ன கிளம்ப சொல்ற?

அக்கீர் அவள் கை பிடித்து வாசல் வரை கூட்டி வந்தான்.

அக்கீர்: கிளம்பு பாப்பா. உன் ஹஸ்பண்ட் உன்ன தேடுவாரு. அதுவும் இத்தனை மணிக்கு நீ இங்க இருக்கறது நல்லதில்ல. மொதல்லா கிளம்பு. நாளைக்கி பேசிக்கலாம்.

சுஜி: அதெல்லாம் ஒன்னும் தேட மாட்டாறு. தேடானாலும் அது என் பிரச்சனை. நான் பார்த்துக்கறேன். நீ எதுவும் பண்ண வேணாம். நான் கால் பண்ணும் போதே நீ எடுத்திருந்த நான் இங்க வந்திருக்கவே மாட்டேன்.

அக்கீர்: எடுத்திருந்த வந்திருக்க மாட்டியே..

சுஜி அவன் பதிலை கேட்டு அசையாமல் நின்றாள். அதுவரை அவள் கைகளை பற்றியிருந்த அக்கீர், அவளை வாசற் கதவின் ஓரம் சாய்த்தான். அவன் முகத்தை அவள் அருகே கொண்டு சென்றான். சுஜி அவளின் கண்களை மூடிக் கொண்டாள். திறந்திருந்த ஜன்னல் வழி மலைச்சாரல் வீட்டின் உள் அடித்தது. பால்கனியின் திரைச் சீலைகள் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் காண்ணாடி கதவுகளை தட தடவென அடித்து பறந்தன.

அக்கீரின் மூச்சு காற்றின் உஷ்ணம் சுஜிக்கு கிறக்கத்தை ஏற்படுத்தியது. காதலாகிய காம மயக்கம் போல. மூடிய கண்களும் சொருகும் என்றால் அது காதல் தான். காமம் அல்ல. நிலை தடுமாறியவளை கைத்தாங்கலாக பற்றிபடியே அக்கீர் அவன் முகத்தை அவளின் இடது பக்க கழுத்தினுள் நிறைந்திருந்த கூந்தலின் உள் புதைத்துக் கொண்டான். இதுவரை அவளின் முகத்தை தாக்கிய அவனின் உஷ்ணமான மூச்சு இப்போது அவளின் கழுத்துகளில் கோலம் போட ஆரம்பித்திருந்தன. இருவரின் இதயமும் பட பட வென துடித்தன என்பதை விட அடித்துக் கொண்டன என்றே சொல்லலாம்.

காதலாகி கசிந்துருகி பாவை ஒருத்தி தன்னிலை மறந்திருப்பாளே ஆனால், அவன் அவளை ஆட்கொள்ளவில்லை அவள் மனதை நங்கூரமாய் ஆண்டிருக்கிறான்.

அக்கீர்:

நூற்றாண்டுகள் வாழ்ந்துவிடவும்
இந்தக் கணமே செத்துவிடவும்
தோன்றும் -
இரு வேறு எல்லைகளை
இணைக்கும் சரடு
உன் அண்மை

முகம் தூக்கி கண்கள் மூடிய சுஜியின் முகத்தை இருக பிடித்து அவளின் உதட்டோரம் அவன் உதட்டை வைத்து,

அக்கீர்:

முத்தமாய் பொழிந்து வைக்க மனமில்லை
மூச்சடைக்க அணைத்துக்கொள்ள தேவையில்லை
விடைபெறும் அந்நேரத்தில்
நானுனை
தொட்டுப் பார்க்க தூடிக்கின்றேன்
கையோடே ஒட்டிக்கொண்டு
கொஞ்சம் என்னோடே
வந்துவிட மாட்டாயடி கண்மணி!

அக்கீரின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சுஜியின் உதட்டை நனைத்து நெஞ்சத்தையும் நனைத்தது. சுஜியின் விசும்பல்களும் அந்த அமைதியான இரவினில் மனதினை கனக்க செய்தது. கண்களை திறந்தவள் சொன்னாள்,

சுஜி: அக்கீர், நான் கனவுல கூட நெனச்சது இல்ல ஊர்கார பையன ஐ மீன் போரீன் ஆள் காதலிப்பேன் அதுவும் ஒரு முஸ்லீம் பையன காதலிப்பேனு....

அக்கீர்: நான் வேணா உனக்கு. நான் ஊர்காரன்.

சுஜி: நீ எவ்ளோ ஹேன்சம்மா இருக்க தெரியுமா? உன் கண்ணு, உன் மூக்கு, உன் முடி, உன் உதடு, உன் கழுத்து...

சுஜியின் விரல்கள் அக்கீரின் கழுத்தை தாண்டி அவன்
நெஞ்சினை தொட்டன. அவளின் வலது கரத்தின் ஆள்காட்டி விரலைக் கொண்டு அவனது இடது பக்க நெஞ்சினில் தட்டினாள்.

சுஜி: நான் இங்க இருக்கேனா?

அக்கீர்: உன்ன தவிர வேற யாரும் இல்லடி.

சுஜி: அப்போ, ஒரு கடி கடிச்சிக்கவா?

அக்கீர்: வலிக்காம எப்படி கடிக்கறதுனு நான் சொல்லி தரட்டுமா?

சுஜி வேண்டாம் என்று தலையசைத்தவாறே மர்ம புன்னகை செய்தபடியே அவள் விரல்களை அவன் காதுகளில் படர விட்டாள்.

அக்கீர்: வேணாண்டி... சும்மா இருடி... எனக்கு உடம்பெல்லாம் கூசுதுடி... பிளீஸ் விட்ருடி....

சுஜி, கெஞ்சிய அக்கீரின் தலையில் டக்கென முட்டினாள்.

அக்கீர்: அடிப்பாவி, ஏண்டி என்ன இப்படி பண்ற?

சுஜி அக்கீரை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். இப்போது அக்கீரும் பார்த்தான். அவளின் இருக் கரங்களையும் இருக பற்றி கதவின் மேல் வைத்தான்.அவளின் இடையை தன் வலதுகை கையால் வளைத்துக் கொண்டான். சுஜி கண்களை மூடி தலையை சாய்த்துக் கொண்டாள். இருவரின் நெருக்கமும் காற்று நுழையா வண்ணம் நெருங்கிருந்தது. அக்கீரின் உதடு சுஜியின் உதட்டினை நெருங்க அலறியது சுஜியின் கைத்தொலைபேசி.

தொடரும்.....

எழுதியவர் : தீப்சந்தினி (21-Aug-19, 1:53 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 268

மேலே