உன்னை பார்த்த முதல் நாள்
உன்னை பார்த்த
முதல் நாளே...
முதல் நொடியே...
விழுந்துவிட்டேன்...
ஈர் உயிர்
ஓர் உயிர் ஆகுமோ
என்று ஏக்கத்துடன்
பார்த்த நொடிகள்....
என்ன சொல்லிக்கொள்ள
போகிறோம் என்று
படபடத்த இரு நெஞ்சங்கள்..
பேசிக்கொள்ள முயன்ற
சில நிமிடங்கள்...
பார்த்த பொழுதே
இந்த நிமிடங்கள் இன்னும்
செல்லாதா என்று
ஏங்கிய மணிகளுடன்...
கடவுளின் முன்னிலையில்...
இரு மனங்களும்,
வாழ்க்கையில் இன்ப துன்பங்களையும்...
பகிர,
ஒன்று சேர சம்மதித்த
நாள் இன்று...
நமக்கும் வாழ்க்கைத்துணை
அமைந்ததே என்று
பெருமிதத்த முதல் நாள்...
இன்றும் மறையவில்லை...
உன்னை முதல் முதல்
பார்த்த அந்த நொடிகள்....
வார்த்தைகள் வேறு
தோன்றவில்லை
உன்னை பார்த்த அந்த
நொடிகளை விவரிக்க....