கண்ணா நீ எங்கே எங்கே

விண்ணை அளந்தாய் அன்று மன்னனுக்குத் தன்னைக் காட்ட
வெண்ணெய் பானையை உடைத்தாய் அன்னைக்கு கோபத்தைக் காட்ட
புன்னகை இதழில் புல்லாங்குழல் இசைத்தாய் ராதைக்கு அன்பைக் காட்ட
உன்னை எனக்குமட்டும் காட்டாமல் கண்ணாமூச்சி ஆடுகிறாய்
கண்ணா கவிதை வரிகளிலெல்லாம் ஓடி ஒளிகிறாய்
கண்ணா நீ எங்கே எங்கே ?

எழுதியவர் : கவின் சாரலன் (23-Aug-19, 10:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 261

மேலே