யுகங்கள் கடந்துவிட்டதடி

தளமில்லா
சிலைமீது மழைத்துளியாய்
தாளமிடும் விழி மூடச் சிலையாக
விழித்திருக்கிறேன்
உனை காண!
முகம் காணா விழிகளிரண்டு
மலர் சுமந்த கைகளில்
சித்திரம் வரைந்ததே கண்ணீரும்
யுகம் கடந்து
ஏமாற்ற அக்கணமே
முள் மலரால் குறிப்பெடுத்து
உள்ளங்கையில் குருதி வழிந்திட!
எதிர் நோக்கிய கண்களும்
ஏமாற்றத்தால் நிரம்பி
வழிகிறதே கண்ணீரில்........
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (25-Aug-19, 6:33 am)
பார்வை : 75

மேலே