ஒரு மெல்லிய காதல்

உன்னிடம்
கொலுசொலியுமில்லை
உன் கூந்தலில்
பூ வாசமுமில்லை
ஆனாலும் எனக்கு குறுஞ்செய்தி
அனுப்புகிறது
நீ பூசியுள்ள நறுமணத்தைலம்
உன் வருகையைப்பற்றி...

ஒரு இலையுதிர் காலத்தில்
உன் வருகைக்காக காத்திருந்தேன்
வாசந்த காலமும் வந்துவிட்டது
ஆனாலும் காத்திருக்கிறேன்
நீ வருவாயென...

ஆதவனின்
மெல்லிய ஒளிக்கீற்றுகள்
மேகங்களை துளைத்து
பூமியில் முளைத்துள்ள
சூரியகாந்தி பூவை தன்திசை
இழுப்பதுப்போல்
உன் நினைவுகள் என்னை
ஆளுகின்றது...

ஒரு நிலவீசும் ஒளியில்
மெல்லிய தென்றலின் வருடலில்
வாசம் நிறைந்த
ரோஜா வனத்திலே
நம் நினைவுகளின் சங்கமம்
விழிகள் மூடிக்கொள்ள
இதயங்கள் திறந்துக்கொண்டது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Aug-19, 4:46 am)
Tanglish : oru melliya kaadhal
பார்வை : 282

மேலே