அவள் அழகு
உன் அழகில் என் மனது பறிபோக
கவிதையாய் அதை வடிக்க முயன்றேன்
உன் அழகில் மூழ்கிய மனம் தேனுண்ட
நரிபோல் தள்ளாட கவிதை வரிகள்
அங்கும் இங்கும் தடுமாற பாவைக்
கோர்க்க முடியாது தவித்தேன் கவிஞன் நான்
முடிவில் நின்றது எழுதி முடிக்க கிறுக்கல்
கிறுக்கலிலும் உன் அழகின் பிம்பங்கள்
காணக்கிடைத்தது இப்போது என் மனம்
தெளிந்த பின்னே பெண்ணே