காதலில் வீழ்ந்தேன்
கங்கையோ என அவள் கண்ணீர் பெருக்கெடுக்க
கலங்கிய பெண்ணாள் அவள்
வற்றிப்போனது அவள் வாழ்க்கை நீரோடை
பெற்றவர்களோ பேதையிவளினை
பேச்சில் வதைக்கிறார்கள்
பாவி மகள் தேடிய வாழ்க்கையென்று
தட்டுத் தடுமாறி தவித்த பெண்ணிவளை
எட்டி உதைத்துச் சென்றவன்
செயல் அறிந்தான் போலும் அவன்
எல்லாம் முடிந்தது என்று ஏங்கி நின்றவளை
தாவிக் குதித்து வந்து தலையை தடவிச் சொன்னான்
விட்டுச் சென்றவனை விட்டு எறி பெண்ணே .......
கட்டிளம் காளை அவனோ
காதினிலே வந்துரைத்தான்
விரும்புகிறேன் உன்னை நானே
வேதனைதான் உன்தன் வாழ்வே
காட்டினிலேதான் எந்தன் வேலை
ஆனால் நாட்டை விட்டு போக மாட்டேன் விடை கொடு பெண்ணே நான் உன் வேதனைகள் தீர்த்திடுவேன்
அவனோ ஆணழகன் அவன் கண்கள் சொல்லியது அவன் உள்ளக்காதலை பேதலித்த
பேதை நெஞ்சம்
காதலில் வீழ்ந்ததே .......