உதட்டு மாயம்
மெல்ல மெல்ல என்னிடத்தில்
கள்ள மில்லா பெண்ணொருத்தி
வஞ்சமில்லா வார்த்தைகளை
வாரி வீசுகிறாளே....!!! பலவாறாய்
ஏசுகிறாளே...!!!
அத்தனையும் என்காதில்
அமிர்தமாய் மாறுவதேன்...
உன் உதட்டில் பட்டதனால்
சுவையாகிவிட்டதோ..... எனக்கது
சுகமாகிவிட்டதே..!!!