வெல்லுவதற்கு வேண்டியவைகள்

அறிவோடு ஆற்றல் முயற்சி பிடிவாதம்
தொடருதல் தூண்டல் நிலைத்தல் அயராமை
அழுவுதல் மகிழ்தல் வியத்தல் நாடுதல்
துரித செயல்பாடு தூய எண்ணம்
கற்றல் அறிதல் விளங்கித் தெளிதல்
சொல் பேச்சுக் கேட்டல் அவற்றை ஆராய்தல்
துன்பம் காணல் உழலுதல் எழுதல்
தெளிவடைந்து தேர்தல் திறமைக் கூட்டல்
எல்லோரையும் அறிதல் எவற்றிக்கும் விடைக் காணல்
எள்ளுதல் அகற்றல் துரோகம் மறத்தல்
துணிவோடு முயலுதல் தூய்மைக் கைக்கொளல்
திரவியம் பெருக்குதல் பெருகியதை பகிர்தல்
திறனுடையரோடு சூழுதல் தெரியாததை கற்றல்
கண்ணியம் பேணல் கருத்தைக் கேட்டல்
உணவைக் குறைத்தல் நோயை அழித்தல்
கோபம் காணல் குறுக்கி அதை மீள்தல்
பொய்மை விரட்டுதல் பொறாமை களைதல்
அஞ்சுதல் அவற்றின் காரணம் அறிதல்
திருட்டைக் கற்றல் பின் அகற்றல் வஞ்சகம் விலக்குதல்
வம்பின் வழியறிதல் வளத்தைக் காத்தல்
உலகத்தோடு ஒட்டுதல் என ஒவ்வொன்றாய்
பழக்கினால் உறுதியாய் வெல்லலாம்
உலகில் தனித்து நாம் உயரலாம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Aug-19, 7:56 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 94

மேலே