காட்டுப் பெண்

குஞ்சனா (உரையாடல் குறுங்கதை)
வாடா தம்பி எங்கடா நீ பெத்த காட்டுப் பொண்ணக் காணோம்.
@@@@@@
என்ன சொல்லறீங்க? நான் மலைல வசிக்கிற ஆதிவாசியா. பொறந்து வளர்ந்த நம்ம ஊர்ல உங்க வீட்டுகக்கு பக்கத்து தெருவில வாழ்ந்திட்டு இருக்கிறேன். நீங்க என்னவோ கேக்கறீங்க.
@@###
தம்பி, ,மூணு வருசத்துக்கு முன்னாடி உனக்கும் உன் மனைவி மருதாயிக்கும் பொறந்த காட்டுப் பொண்ண ஏன் இன்னிக்கு உங்கூட கூட்டிட்டு வரல.
@########
எஞ் செல்லம் தூங்கிட்டு இருக்குதண்ணே. ஏன் எம் பொண்ணக் 'காட்டு பெண்'ன்னு சொல்லறீங்க?
@@@#@@#
அவ பொறந்ததும் பிரபல சோதிடர் இஷ்டலிங்கத்துக்கிட்ட பிறந்த நாள் குறிப்பெழுதிட்டு அவரு சொன்ன பேரையே உம் பொண்ணுக்கு வச்சியே அந்தப் பேரச் சொல்லு.
@#####
உங்க தம்பி மகளக் கொஞ்சத் தெரியுது. அவ பேரு மறந்து போச்சா? என்ன வெளையாட்டு அண்ணே இது?
@@####
சரி சொல்லுடா தம்பி, சின்னமலை.
@@@@@@
எம் பொண்ணு பேரு 'குஞ்சனா'. நம்ம எட்டுப்பட்டி கிராமங்கள்ல யாருமே அவுங்க பொண்ணுக்கு வைக்காத பேரு. அந்தப் பேரை நெனைச்சு நான் ரொம்ப பெருமைப் படறேன் அண்ணே.
@@@@@@
சரிடா சின்னமலை, 'குஞ்சம்மாள்'னுதான் ஒரு பாட்டி நம்ம ஊருல இருந்தாங்க. இந்த 'குஞ்சனா'வுக்கு என்னடா அர்த்தம்?
@@@@@##
இந்திப் பேருக்கெல்லாம் அர்த்தம் (பொருள்) தெரிஞ்சு யாரு பேரு வைக்கிறாங்க? இந்திப் பேரா இருந்தாச் சரி. இந்திப் பேருங்கதான் தற்கால தமிழர்களின் அடையாளம். சரி 'குஞ்சனா'வுக்கு என்ன பொருள்னு நீங்களே சொல்லுங்க அண்ணே.
@@@@@@@
வடக்க வேலை பாக்கற எம் மூத்த பையன்.
முத்தரசன்கிட்ட செல்பேசில கேட்டேன். 'குஞ்சனா'ன்னா ( Konjana) 'காட்டுப் பெண்' (Forest girl)- ன்னு அர்த்தம்னு சொன்னான்.
@@@@@@
இப்ப புரிஞ்சுதா.
@@@@@@@
எந்த அர்த்தமோ இருந்துட்டு போகட்டும். எம் பொண்ணுப் பேரு இந்திப் பேரு. அது போதும் எனக்கு. நம்ம மூணு பேரைத் தவிர வேற யாருக்கும் இந்தப் பேருக்கான அர்த்தம் தெரியப்போறதில்ல. விடுங்க அண்ணே. ஒரே நாடு. ஒரே மொழிப் பேரு. இதுதான் கொள்கை.
@@#@@@
பரவால்லடா தம்பி. நீ பொழச்சுக்கவே.

எழுதியவர் : மலர் (6-Sep-19, 11:25 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 187

மேலே