விடைதெரியா வினாக்கள்

===========================
விளக்கின் திரியிடமிருந்து
விடைபெற்றுச் செல்லும்
ஒளியின் ஓய்விடம் எங்கே..
ஊகித்தவர் யார்?
*
ஒளியின் வரவிலெலாம்
மறைந்து கொள்கின்ற
இருளின் இருப்பிடம் எங்கே
எடுத்துச் சொன்னவர் யார்.
*
வண்ணங்கள் பூணும் வானவில்
நிறங்கள் எங்கிருந்து வந்தன ..
திரும்பி எங்கே செல்கின்றன
கண்டு சொன்னவர் யார்?
*
மதங்கள் மறைகின்ற நாளில்
கடவுள் என்ன செய்வார்
யோசித்துப் பார்த்தது யார்.
*
நாம் காணும் கனவு
நம்மைப்பற்றி
என்ன கனவு காணும்
கேட்டுப் பார்த்தது யார்.
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Sep-19, 1:40 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 254

மேலே