மாத்திரை வேண்டாம்
மருந்தை யன்று கண்ட தில்லை
மாத்திரை யிதுபோல் உண்ட தில்லை,
விருந்தாய் மாத்திரை தினமும் உண்கிறார்
விட்டால் உயிரே போய்விடும் என்கிறார்,
திருந்திட வேண்டும் மனிதர் வருந்தியே
தின்றிட வேண்டும் உணவை மருந்தாய்,
கருத்தினில் கொண்டிடு கவலையை விட்டிடு
காண்பாய் உடலில் மனதில் தெம்பையே...!