பெண் அழகு

தன் அழகை தான் அறியாள்
அவன் பார்த்து ரசித்திடவே
கண்ணாடி முன் நின்று
தாளலயம் போடுவாள்

உன் விழிகள் மீன் என்று கேட்டிடவே
மையீட்டி மெருகூட்டிடுவாள்

நின் கூந்தல் கங்கை கொண்ட சோழபுரி
முடிபோலென வர்ணனை புரிந்திடவே

நெய்யிலே கறிவேப்பிலையிட்டு
வெந்தயமும் தூவி
சீயக்காய் தேய்த்திடுவாள்

கிளிபோல செக்கச் சிவந்த சொண்டென்று கூறிவிட்டால்- இன்னும் கொஞ்ச எழில் காட்ட சாயம் தன்னை பூசிடுவாள்

கன்னத்துக் குழியழகென்றால்
வெண்பனிப்பூப்போல்
முத்துதிர்த்து கவர்ந்திழுப்பாள்

பொன்மேனி நிந்தினதென்றால்
பொழுதுமட்டும் மஞ்சம் தேய்ப்பாள்
இன்னுமின்னும் மின்னிடவே

வெண்டைக்காய் விரல்களென்றால்
வேகுமட்டும் வெள்ளி பார்ப்பாள்
வெதும்பவிட விருப்பமின்றி

மௌனமதைக் காத்திடுவாள்
அமைதியவள் குணமென்று காது குளிரக் கேட்டிடவே...

நாணமதை பூண்டிடுவாள் நாற்பதிலும்
நகைப்பொலி விரும்பாள்

அதிக வர்ணனை அருவருப்பென்பாள்
அளவோடு பேசினால் அங்கமெல்லாம் பூரிப்பாள்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (7-Sep-19, 9:26 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 453

மேலே